Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 24, 2020 2019 0 Rev Dr Roy Paalaatty
ஈடுபடுங்கள்

விமான நிலையத்தõல் பாவசங்கீர்த்தனக்கூண்டு

ஷாலோம் திருவிழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நான் மேடையை விட்டுக் கீழிறங்கி வந்தேன். அப்போது என் எதிரே வந்த ஒரு சகோதரி என்னிடம் இரக்கத்தின் இவ்வாண்டில் நீங்கள் நல்லகாரியமாக எவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் அவருக்கு மறுமொழியாக, “”இரக்கத்தைத் தியானிக்கிறேன். அதைக் குறித்து உரையாற்றுகிறேன், அதைப்பற்றி ஏராளம் எழுதுகிறேன், அந்த இரக்கத்தின் வழியில் வாழ முற்படுகின்றேன்” என்றேன். அதற்கு அச்சகோதரி, “இதை எல்லாரும் தான் செய்வர், நமக்கென்று வித்தியாசமான எதையேனும் செய்யக் கூடாதா?’ என மீண்டும் கேட்டார். நான் சற்று பம்மியும் பதுங்கியும் ஏதேதோ சொல்லிலõக் கொண்டிருந்தேன். உடனே அவர் என்னிடம் “நீங்கள் உங்கள் அதிகப்படியான நேரத்தை எங்கே செலவிடுகிறீர்கள்? எனக் கேட்க, நான் மறுமொழியாக, “விமான நிலையத்தில் தான் அதிகமான நேரத்தைச் செலவிடுகிறேன் என்றேன்.

அப்படியானால் ஏன் நீங்கள் விமான நிலையத்தில் பாவசங்கீர்த்தனம் கொடுக்கக் கூடாது? எனக் கேட்டார். அங்கு வந்துபோகும் பயணிகள் பலரும் கோவிலுக்கு வராதவர்கள் அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு உங்களின் சேவை மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்காதா? எனக் கூடுதலாகவும் சொன்னார்.

இங்கு பாவசங்கீர்த்தனம் கிடைக்கும்

அன்று ஒரு மாலைப் பொழுது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் அந்த விமான நிலையத்தில் வெட்டியாக இருந்தாக வேண்டும். எனவே ஒரு குவளை தேனீர் அருந்திய கையோடு அனைவரும் பார்க்க முடிந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்தேன். ஏற்கெனவே எழுதி மறைவாக வைத்திருந்த ஒரு சிறிய பதாகையை எடுத்து ஒரு சின்ன குச்சியில் தொங்கவிட்டேன். அதில் ஸ்ரீர்ய்ச்ங்ள்ள்ண்ர்ய் அஸ்ஹண்ப்ஹக்ஷப்ங் (பாவசங்கீர்த்தனம் கிடைக்கும்) என எழுதப்பட்டிருந்தது. கையில் ஒரு ஜெபமாலையுடன் அமர்ந்திருந்தேன் சுமார் அரைமணி நேரமாகியும் யாருமே இந்தப்பக்கம் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை. தப்பித்தவறி என்னைக் கவனித்தவர்கள் ஒருவழி யாகக் கடந்து போயினர். கொஞ்சம் கழித்து காவல்துறையினர் மூன்று பேர் என்னருகே வந்தனர். சீருடையில் வந்த அவர்களைப் பார்த்ததும் சற்று பதற்றமாகத்தான் இருந்தது. அவர்கள் என்னிடம், “ஐயா, இங்கே விற்பனை செய்ய அனுமதியில்லை’ என்று கராறாகக் கூறிவிட்டனர். நானும், “விற்பனைக்கு என்னிடம் எதுவும் கிடையாது. நான் யார் என்றுதான் இதிலே எழுதி வைத்திருக்கிறேன். என்னை நானாக மாற்றுவதே இதுதான்’ என்றேன். அவர்களும் “ஆகட்டும்’ எனச் சொல்லிலõவிட்டு நகர்ந்துபோயினர். எங்கே சவால்கள் உண்டோ அங்கேதான் நற்செய்தி நல்ல விளைச்சலை அள்ளித்தரும்.

நான் ஏறெடுத்துப் பார்க்கையில் ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி பக்கத்திலே ஒரு கடையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன்னால் குவிந்திருக்கும் புட்டிகளை நான் ஓரக்கண்ணால் எண்ணினேன். ஏதோ ஒரு குழப்பம் இருப்பதாகத் தெரிந்தது. அல்லாவிடில் இந்தக் காலம்காத்தாலேயே வந்து இப்படி அள்ளிப்பருகியிருக்க மாட்டாள்! நோய்வாய்ப்பட்டவர்களுக் கல்லவோ மருத்துவர் தேவை. நான் அவளுக்காக ஜெபித்தேன். அவளும் சீக்கிரமாக எழுந்து என்னை நோக்கி நடந்தாள். வந்ததும் வராததுமாக என் காலிலõல் விழுந்தாள். நான் சற்று அதிர்ந்தேன். அவளுக்குப் பருத்த உடம்பு. அவள் என்னிடம், “பாவசங்கீர்த்தனம் வேண்டும் சுவாமி’ என்றாள். அது முடிந்ததும் அவள் தன் உள்ளக்கிடக்கையைத் திறந்தாள்.

இரண்டாவது கணவனும் அவளை ஏமாற்றிவிட்ட ஆத்திரத்தில் அவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டாள். முதல் கணவனுக்குப் பிறந்த மூத்த மகன் அதற்குத் தேவையான துப்பாக்கியை அவளிடம் கொடுத்திருந்தான். ஒரு பல்கலைக்கழகத்துறைத் தலைவராக வேலைபார்த்த அவளுடைய வங்கி முதலீடு முழுவதையும் அவன் அபகரித்துக் கபளீகரம் பண்ணிவிட்டான். அவனுடைய சொகுசு வாழ்க்கையைக் குறித்து இவளது மகன் அடிக்கடி எச்சரித்த பின்னும் இவள் செவிக் கொள்ளவில்லை. இறுதியில், அவன் இன்னொரு பெண்ணுடன் சுற்றுவதாகவும் அறிந்தாள். அப்போதே இவள் மனம் தளர்ந்தாள். ஏமாற்றமும் வெறுப்பும் பழிவாங்க வேண்டுமென்ற ஆவேசமும் இவளுக்குள் பொங்கி வழிந்தன. ஆகவே அவனைக் கொன்று தன் கவலையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தாள். புண்பட்ட மனத்தை ஓரளவு தேற்றுவதற்காகவே மதுவுக்கும் அடிமையானாள். ஆனால் இப்பாவசங்கீர்த்தனம் இவளுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

அவள் எனக்கு நன்றிகூறி நடந்துசென்றாள். கடவுளின் கருணை கோவிலுக்குள் என்பதை விட கோவிலுக்கு வெளியேதான் மிகுதியாக வெளிப்பட வேண்டும் என அப்போது எனக்குத் தோன்றியது. கோவிலுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்திற்கும் கீழே தான் இருக்கிறது. சொல்லப் போனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இனியெல்லாம் தெருக்களில்தான் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கல்வி நிலையங்கள், கருணை இல்லங் கள் போன்ற இடங்களே இனிமேலும் நற்செய்தி முழக்கத்திற்கான முச்சந் திகள். “”நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும். நீ படுத்திருக்கும்பேது அவை உன்னை காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னிடம் உரையாடும்” (நீமொ. 6:22) என்னும் இறைவார்த்தையை நாம் இணைத்து வாசிக்க வேண்டும்.

ஆண்டவரின் பணியாளர்கள் சோர்வடையக்கூடாது. இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாய் இருந்த பெலிலõஸ்தியனான கோலõலியாத்தை ஞாபகம் இருக்கிறதா? அவனோடு மோதும் துணிச்சல் யாருக்கும் இல்லை. யாராலும் அதற்கு முடியவும் இல்லை. ஆனால் அது தாவீது என்ற ஆடுமேய்ப்பன் வரும் வரை தான். ஆனால் பாருங்கள், தாவீது வரும் வரை பெலிஸ்தியன் என்ன செய்கிறான் என்று! அவன் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக சவால் விட்டுக் கொண்டே இருந்தான். இதிலிலõருந்து, அலகை தன் கடமைகளை நாள்தவறாமல் ஒழுங்காகச் செய்கிறது எனப் புரிகிறதல்லவா? அவனுக்கு ஓய்வேது, உறக்கமேது? இங்ஙனம் விடுப்பே இல்லாமல் பகைவன் மிடுக்காகப் போரிடும்போது ஆண்டவருடைய ஊழியர்கள் ஏன் விடுப்பில் செல்ல வேண்டும்? இதனால்தான் திருத்தந்தை பிரான்சிஸ் குருக்களிடம் கூறும்போது, “”குருத்துவம் இடகாலங் களுக்கு உட்பட்டதல்ல; அது ஒரு பதவியும் அல்ல; ஆனால் குருக்கள் எல்லாக் காலத்திலும் இறைமக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

நாற்பது நாள்கள் ஒரு பெலிலõலிஸ்தியன் இறைமக்களை இடைவிடாமல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது ஆண்டவரின் அருட்பொழிவு பெற்ற மன்னனும் மன்னனின் படைவீரர்களும் எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கி றார்கள். அவர்கள் ஒன்றுகூடி புதுப்புது வழிகளை ஆராயவோ இறைவேண்டலிலõல் முழுகவோ செய்யாமல் வாளாவிருக்கின்ற னர். அறுசுவை உணவுண்டு, வேலைக் கார பரிவாரங்களின் குற்றேவல் கொண்டு, நாற்காலிலõகளையே முற் றாகப் பற்றிக் கொண்டிருக்கின்ற னர். பகைவன் பதற்றமே இல்லாமல் படையெடுத்து வரும்போது, கடவுளின் ஊழியர்கள் தொடை நடுங்கிப் பின்வாங்குகின்றனர். பெலிலõலிஸ்திய னான கோலிலõலியாத்து தன் ஆசானுக்கு முற்றிலும் கட்டுப்படுகிறான். ஆனால் இறைமக்களோ அவ்வப்போதுதான் தங்கள் ஆசானை நினைத்துப் பார்க்கின்றனர். உண்மையில் இது ஒரு பகுதிநேர வேலை அல்ல; இதுவே நம் வாழ்வு. இரவும் பகலும் அப்படியே

Share:

Rev Dr Roy Paalaatty

Rev Dr Roy Paalaatty

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles