Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 24, 2020 2105 0 Shalom Tidings
ஈடுபடுங்கள்

இயேசுவின் கை வண்ணத்தாலான “சிக்கன்ஃப்றை’

2010 செவிலிலõயர் படிப்பை முடித்துவிட்டு வேலைக் காக அலைந்து திரிந்த காலம். சவுதி நாட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். வேலைக்குச் சேர வேண்டும் என்ற அவசரத்தில், கடவுளிடம் கூட ஆலோசனை கேட்காமல் சவுதிக்குச் செல்ல ஆயத்தமானேன். ஆனால் என் பெற்றோர் அதற்கு அனுமதி தரவில்லை. அவர்களது எதிர்ப்பையும் மீதி சவுதிக்குச் செல்லத் தயாரானேன்.

சவுதிக்குச் செல்வதற்கு நான் காட்டிய அவசரத்தை பலரும் எதிர்த்த படியால் நானும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன் எதற்கும் ஒரு குருவானவரிடம் சென்று யோசனை கேட்கலாம் என நினைத்து பங்குத் தந்தையிடம் சென்றேன். அவர் எனக்காக இறைவேண்டல் செய்தார். பிறகு என்னைப் பார்த்து, “”மகனே, நீ ஒர் அறையில் தன்னந்தனியாக இருந்து அழுவதைக் கடவுள் எனக்குச் சுட்டிக்காட்டுகிறார்” என்றார். ஆனால் நான் அவருடைய ஆரூட தரிசனங்களையும் பொருட்படுத்தவில்லை.

நான் எப்போது சவுதிக்குச் செல்லத் திட்டமிட்டேனோ அப்போதிலிலõருந்தே என் வாழ்க் கையில் ஏராளமான சங்கடங் கள் இடையீடுகளாக வரத் தொடங்கின. தொட்டதெல்லாம் துலங்காமற்போயின. மாதங்கள் சில சென்ற பின்னும் விசா வந்தபாடில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தான் “”விசா” கிடைத்தது. இப்படி, ஒரு வழியாக சவுதி நாட்டை அடைந்த போது தான் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னவர்களின் மோசடி புரியவந்தது. சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் “”நர்சிங் விசா” எடுத்துச் சென்ற என்னை அவர்கள் பந்தைப் போல உருட்டி விளையாடினர்.

நிலையான ஒரு தங்குமிடம் எனக்குத் தரவில்லை. இன்று ஓரிடம், நாளை இன்னோ ரிடம் என மாறி மாறித் தங்க வைத்தனர். பல நாட்கள் வேலை இல்லை. அறையில் வெட்டியாக உட்கார்ந்திருந்தேன். என்னை வேலைக்குச் சேர்ப்பதாக வாக்களித்த மருத்துவமனையின் கட்டுமா னப்பணிகள் அப்போதுதான் நடந்து கொண்டிருந்தன. உண்மையில் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். சூழ்ச்சிகள் ஏமாற்றுகள், மோசடிகள் போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை நேரடியாக உணரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கடைசியில் நானே அவர்களுக்கு சுமையாகி விட்டேன் ஒருவழியாக என்னை பையன்களின் அறையில் அவர்கள் தங்கவைத்தனர்.

ஏழு பையன்கள் அவ்வறையில் இருந்தனர். அன்று வரை நான் கேள்விப் படாத அருவருப்பான காரியங் களை அந்நாட்களில் கண் ணெதிரே கண்டேன். கேலிலõக் கிண்டல்கள், கும்மாளக்கூத்துகள். அழிச்சாட்டியங்கள் என அனைத்துமே அச்சிறு அறையில் அரங்கேறின. வேண் டாப் பெண்டாட்டி கைதொட்டாலும் குற்றம், கால் வைத்தாலும் குற்றம் என்னும் பழமொழி எழுத்துப் பிசகாமல் நிறைவேறுவதை என் வாழ்க்கையில் கண்டேன். ஆனாலும் நான் எல்லாவற்றையும் பொறுமையாக சகித்தேன். வாழ்க்கையை உந்திஉருட்ட வேண்டிய கட்டாயத்தில் நான் எல்லாம் மறந்து அவர்களோடு இருந் தேன். நான் தங்கும் அறையும், உண்ணும் உணவும் எல்லாமே அவர்களின் ஈவு. எனவே நான் அவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டியது கட்டாயம். கடவுளிடம் வேண்டுவது ஒன்றே என் ஒரே ஆறுதல். வேலை வாங்கித் தருவதாக் கூறியவர்கள் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தனர். என் விஷயத்தில் அவர்கள் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. என் உணவுக்கான பணத்தைக்கூட அவர்கள் தரவில்லை. அறையை விட்டு வெளியே தலை காட்டுவதற்கான “இக்காமா’ அட்டையைக்கூட எனக்கு அவர்கள் தரவில்லை. என் வாழ்க்கை கண்ணீரின் பாதாளத்திலே அமிழ்ந்து போனது. ஒவ்வொரு நாளும் நான் நானாக இல்லை, வேறு யாராகவோ மாறிக்கொண்டிருந் தேன். புறாக்களின் கேவுதல் போன்ற என் கூக்குரல் கடவுளின் அரியணையை முற்றுகையிட்டது. ஏராளமான ஜெபமாலைகள்; யூþடிþயூப் வழியிலான வசன சொற்பொழிவுகள் போன்றவை எனக்கு சற்றே வருடலாக இருந்தன. ஜெபத்திலே முழுகி னாலும் உள்ளம் கவலையில் கரைந்து கொண்டே இருந்தது. எவ்வளவு தான் பசித்தாலும் பையன்களின் மதுபான கேளிக்கைகள் முடியாமல் உணவு கிடைக்காது. நள்ளிரவு தாண்டினாலும் இது தான் வாடிக்கை.

ஒரு நாள் என் அறையில் உள்ளவர்கள் வெளியே ஒரு விருந்து உபசரணைக்காகச் சென்றிருந்தனர். திரும்பி வரும் போது எனக்கான உணவைக் கொண்டு வருவதாகவும் எனவே சமைக்க வேண்டாமென்றும் சொல்லõலிச் சென்றனர். இரவு நெடுநேரமான பின்னும் அவர்கள் வரக்காணாமையால் நான் தளர்ந்து போனேன். பசி என் உச்சந் தலையை முட்டியது. அடுக்களையில் ஏதேனும் சமைக்கலாமா என்று பார்த்தால் பயம். அன்று நான் சுண்டப்பசியோடு படுத்துவிட்டேன். உறக்கத்தின் இடையில் பசி வாட்டியதால் எழுந்துவிட்டேன்.

பசித்த ராத்திரி
என் வாழ்க்கையில் அப்படி

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles