Trending Articles
வங்கி ஊழியராகிய எனக்கு புதிய கிளைமேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. புதிய கிளைக்குச் செல்ல நாள் பார்த்திருக்கும் சமயத்தில் மேலிடத்திலிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “”புதிய கிளைப் பொறுப்பை எடுத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை; மது அருந்திப் பணிக்கு வரும் தோமஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஊழியர் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு தமது குடியை நிறுத்திக் கொள்ளாத காரணத்தால் மருத்துவர் அல்லது போலீசாரிடமிருந்து சான்றொப்பம் பெற்ற ஓர் அறிக்கையைத் தலைமை அலுவலகத்தில் தொலைநகல் செய்திட வேண்டும். அவருக்கான இடைநீக்க உத்தரவு தொலைநகல் (ஊஹஷ்) செய்யப்படும். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். பிறகு விசாரணையைத் துரிதப்படுத்தி அவரைப் பதவிநீக்கம் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லõலிய வேகத்தில் அவர் தொலைபேசியை வைத்துவிட்டார்.
என் மகிழ்ச்சி காணாமற்போயிற்று. புதிய கிளையில் முதல் வேலையே ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதா? உறங்க முடியாமல் புரண்டுக்கொண்டிருந்தேன்.
அந்த நாள் வந்தது. குறித்த நேரத்தில் நான் கிளை அலுவலகத்தை அடைந்தேன். புதிய கிளையின் ஊழியர்களுக்கு என்னை நான் அறிமுகம் செய்துவைத்தேன். பிறகு அங்குள்ள ஊழியர்களைப் பழக் கப்பட்டேன். தோமஸ் என்பவர் அவர்களோடு இல்லை. பதிவேட்டில் அவர் ஒப்பமிடவும் இல்லை. சற்றே எனக்கு ஆறுதல். முதல்நாளில் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. புதிய கிளை சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இயங்கியது. கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏராளமாக இருக்கும் இடமாகையால் அருட்தந்தையர்களும் அருட்கன்னியர்களும் பரவலாகப் புழங்கும் ஒரு கிளையாக அது இருந்தது.
மதிய உணவுக்குப் பின் நான் என் சிற்றறையில் வந்து உட்கார்ந்தேன். அப்போது கிளையின் ஊழியர்ப்பிரதிநிதி என்னைப் பார்த்துப் பேச வந்தார். இந்தக் கிளையில் சிற்சில பிரச்சனைகள் உண்டென்பதை எனக்கு உணர்த்தினார்.
ஆமாம். பிரச்சனைக்குரிய நபர் இன்று வரவில்லைதானே என்றேன். இல்லை. அவர் வந்திருக்கிறார். பொதுவாகவே மதியம் வரை அவர் மயக்கத்தில் இருப்பார். இன்று சிறிது நேரத்தில் உங்களைக் காணவருவார். அவரது பீடிகை எனக்குப் புரிந்தது.
நான் எதிர்பார்த்தபடியே “அந்நபர்’ என் சிற்றறைக்கே வந்துவிட்டார். “”உங்களைப் பழக வந்தேன்” என்றார். நடத்தையில் சற்று முரட்டுக்குணம் வெளிப்பட்டது.
“தோமஸ் சற்றே உட்காருங்கள்; இன்று நீங்கள் பணியில் இல்லை; எனவே, பதிவேட்டில் ஒப்பமிடவும் வேண்டியதில்லை. இன்றைய விடுப்பை முன்கூட்டியே அறிவிக்காததற்கு விளக்கம் தர வேண்டும். நாளையும் இப்படியே தொடர்ந்தால் வங்கிப்பணி முயற்கொம்பாக மாறலாம்”. நான் சற்று கடுமையாகவே சொன் னேன். திருந்த நினைத்தால் அவகாசம் உண்டு எனக்கூறி முடித்தேன்.
கதை திரும்புகிறது
மறுநாள் தமக்கு விடுப்பு வேண்டுமென தொலைபேசியிலேயே சொல்லிலõவிட்டார் தோமஸ். கொஞ்சம் கழித்து இன்னொரு ஊழியருக்கு ஓர் அழைப்பு: “தோமசினுடைய மனைவியும் மக்களும் இரயில் தண்டவாளத்தில் நடந்துபோகிறார்கள்” என்ற தகவல் எதிர்முனையிலிலõருந்து வந்தது. ஏதோ விபரீதம் நடப்பது போல் எனக்குத் தோன்றியது. ஊழியர்கள் இருவரை உடனடியாக ஒரு காரில் ஏற்றி நிலைமையை விசாரித்து வருமாறு அனுப்பி வைத்தேன். திரும்பி வந்த அவர்கள், “இன்னும் கொஞ்சம் பிந்தியிருந்தால் நிலைமை மோசமாகப் போயிருக்கும்’ என்றனர்.
மறுநாள் தோமஸ் என் சிற்றறைக்கு வந்தார். நான் அவரை அமரும்படிக் கேட்டுக் கொண்டேன். உண்மையில் உங்களுக்கு என்ன பிரச்சனை என அன்புடன் விசாரித்தேன்.
“”எனக்கு நான்கு பசங்கள். மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும். மனைவிக்கு வேலை எதுவும் இல்லை. வெறும் கடைநிலை ஊழியராய் வேலை பார்க்கும் எனது சம்பளத்தில் தான் வீட்டுச் செலவும், பிள்ளைகளுடைய படிப்பும் நடந்துபோக வேண்டும். கடன்பட்டுத்தான் வாழ்க்கையை உருட்ட வேண்டியிருக்கிறது. இதனால் வட்டிக்காரர்கள் தொந்தரவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. மன உளைச்சல் அதிகரித்த காரணத்தால் மதுவுக்கு அடிமை யானேன். இதனால் வெளியே தலை காட்ட முடியவில்லை. இப்போது கடனாளியாக மாறிவிட்டேன்”. தோமசின் விம்மலைக் கண்டு வருந்திய நான் “இனி எவ்வளவு கடன் இருக்கிறது? எனக் கேட்டேன்.
முப்பதாயிரம் ரூபாய் என்றார் வெகு பவ்யமாக! இவ்வளவு தொகையும் கிடைக்குமானால் கடனை அடைத்துவிட்டு மது அருந்துவதை நிறுத்தலாமா? என வினவினேன். “கண்டிப்பாக’ என்றார் தோமஸ். “நம்பலாமா?’ என மீண்டும் கேட்டேன். நான் வாக்கு மாறக்கூடியவன் அல்ல என்றார் அவர்.
என் உள்ளத்தில் எதிர்நோக்கின் ஒரு வெளிச்சக் கீற்று மின்னி மறைந்தது. உடனே ஊழியர்ப் பிரதிநிதியை என் சிற்றறைக்கு வருமாறு அழைத் தேன். தோமசின் கஷ்டத்தில் நாம் கைகொடுத்தாக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என அவரிடம் வினவினேன். நாம் எல்லாரும் இணைந்து நமது சம்பளத்திலிலõருந்து முப்பதாயிரம் ரூபாய் சேர்ப்பதென்றும், தோமசின் கடனாளிகளை நம் கிளைக்கே வரவைத்து பணத்தைக்கொடுக்கலாமென்றும், பிறகு தோமசின் சம்பளத்திலிலõருந்து அதை ஈடுகட்டலா மென்றும் நான் ஒரு யோசனையை வைத்தேன். என் யோசனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
இவ்வாறு தோமசின் கடன் முழுவதும் மீட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிலõருந்து தோமஸ் மது அருந்தவில்லை; ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுமில்லை.
இது இங்ஙனமிருக்க மேலிடத்திலிடமிருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. உங்களிடம் ஒப்படைத்த காரியம் என்னவாயிற்று? அறிக்கையை இதுவரைத் தாக்கல் செய்யவில்லையே? மேலதிகாரியின் அதட்டல் எனக்கு நெருடலாகத் தெரிந்தது.
தோமசின் தற்போதைய நடத்தையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதற்கு அவர், இப்படித்தான் பலரும் அவரைத் திருத்தப் பார்த்து தோல்வியடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு திருத்தல் முயற்சி தேவையா? என வினவினார்.
மேலும் அவர் மேலிடத்தின் அதிருப்திக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். சொன்னதைச் செய் யுங்கள் எனக்கூறி பேச்சை முடித்தார்.
வாழ்க்கையில் புதுவசந்தம்
அன்றிலிலõருந்து நான் தோமசுக்கு சில புதிய பொறுப்புகளையும் கொடுத் தேன். என்னைப் பார்க்க வரும் பயனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதே அப்புதிய பொறுப்புகளில் ஒன்று. அந்தப் பொறுப்பு தோமசுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் ஏற்பட்டது.
ஒருநாள் நான் தோமசினுடைய வீட்டிற்குச் சென்றேன். மூன்று ஆண் பசங்களும் ஒரு பெண்ணும் ஒலிலõவங்கன்றுகள் போல் ஓடியாடித் திரிவதைக் கண்டு மகிழ்ந்தேன். தோமஸ் இப்போது மானமுள்ள மகராசன். குடும்ப மாகச் சேர்ந்து எல்லாரும் கோயிலுக்கு சென்று வருகி றார்கள். ஜெப ஊழியத்திலும் ஆர்வம் செலுத்திவருகின்றனர். பசங்களிடம் பேசினேன். ஒருவன் குருவாகப் போகவேண்டுமென்று சொன்னான். இன்னொருவன் சட்டம் படிப்பதாக இருந்தான். இளையவன் வர்த்தகத்தில் கால்பதிப்பதாக ஆசை. குருமடத்தின் வங்கிக்கணக்கு எங்கள் கிளையில்தான் இருந்தது. எனவே குருமட அதிபரிடம் பேசினேன். ஒருவனைக் குருமடத்தில் சேர்த்துக்கொள்வதாகவும் இன் னொருவனுக்குக் குருமடத்தில் ஒரு வேலைகொடுப்பதாகவும் அவர் கூறினார். வேலையுடன் சட்டம் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். தோமசின் குடும்பத்திற்கு இது மிகப்பெரும் ஆறுதல்.
ஆண்டுகள் உருண்டோடின. எனக்கும் பதவிஉயர்வு கிடைத்தது. இடமாற்றமும் கூடவே வந்தது. ஒருநாள் ஒரு வாட்டசாட்ட இளைஞன் என்னைப் பார்க்க வந்தான். அவன் தோமசின் மூத்த மகன். சவுதி அரேபியாவில் வேலை. அவன் படித்த சட்டம் அவனுக்குக் கைகொடுத்தது. அவன் தம்பி குருமடப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான். பெற்றோர் சேமமாகவும் சுபிட்சமாகவும் இருக்கின்ற னர். தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைக்க வந்திருக்கி றான். அவ்விளைஞனின் மலர்ந்த முகத்தையும் ஒளிர்ந்த கண்களையும் கண்ட போது என் மனம் இவ்வாறு சிந்தித்தது.
கடவுள் நமக்குத் தரும் வாய்ப்புகள் ஏராளம். நமது கனிந்த பார்வையும் அரவணைப்பும் பலரது வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கிரியா ஊக்கிகளாக மாறட்டும். ஒருவரது வாழ்க்கையைச் சிதைத்து விடுவது எளிது. ஆனால் கட்டி எழுப்புவது அவ்வளவு எளிதாக இருக்க முடியாது. இதுவல்லவோ நமது வருங்கால சேமிப்பாக இருக்க முடியும்!
David
Want to be in the loop?
Get the latest updates from Tidings!