Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 24, 2020 2151 0 Dr. John D.
ஈடுபடுங்கள்

ஜெபத்தினால் பாலம் கட்டுவோர்

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கத் துறைமுகங்களையும் கப்பல்களையும் தகர்ப்பதற்காகத் தலைமையேற்றுப் படைநடத்திய ஜப்பான் இராணுவத் தளபதி “பிட்ஸ்மோ பூஷிதா’ அமெரிக்காவை வென்று மக்களின் மனங்கவர்ந்த தலைவராய் மாறினார். எங்கிருந்தும் அவருக்குப் பராட்டுகள் வந்து குவிந்தன. ஏனென்றால் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டுக்குள் அஞ்சாமல் சென்று குண்டு மழை பொழிய அவர் துணிச்சல் காட்டினார். ஆனால் பிட்ஸ்மோவின் வாழ்க்கையோ ஒரு மாபெரும் ஏமாற்றமாய் மிஞ்சியது. வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை என அலுத்துக்கொண்டார்.

ஜேக்கப் டி. ஷேட்சர் என்னும் அமெரிக்க விமானி போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டு ஜப்பானிய சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறைக்குள் அன்னபா னம் ஏதும் உண்ணாமல் மனநலம் குன்றிய ஒருவரைப் போல் காறித்துப்புவதும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவதுமாக நாட்களை கழித்தார். அப்படிக்கிடந்த அவருக்கு யாரோ ஒருவர் ஒரு பைபிளைக் கொண்டுவந்து கொடுத்திருக்கி றார். மற்றொன்றும் வாசிக்கக் கிடைக்காமையால் அவர் பைபிளையே மறுபடியும் மறுபடியும் வாசிக்கலானார். அதிலும் புதிய ஏற்பாட்டைப் பலதடவைப் படித்தார். அலறிப் பிதற்றிக்கொண்டிருந்த அவர் மெல்ல மெல்ல சாந்தமா னார். பைபிளை வாசிப்பதும், கண்களை மூடி தியானம் செய் வதுமாக அவரது வாழ்க்கை நகர்ந்தது. தம்மோடிருந்த பிற கைதிகளிடமும் சிறை அதிகாரிகளிடமும் அவர் அன்பாகப் பழகத் தொடங்கி னார். இது பற்றிக் கேட்டவர்களி டம், “”இயேசு என்னை முற்றிலும் மாற்றிவிட்டார்” என்றார்.

ஜேக்கப் டி. ஷேட்சரின் மனமாற்றம் பிட்ஸ்மோவை வியக்க வைத்தது. வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என சோர்ந்திருந்த அவருக்கு இது புது உற்சாகத்தை ஊட்டியது. ஒரு நாள் பிட்ஸ்மோ அந்த விமானியிடம், “ஆமாம், நான் உங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்; இரண்டு மூன்று வாரம் முன்புவரை அலறியழுத நீங்கள் இப்போது எப்படிச் சாந்தமானீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அவர், “”இயேசு என்னை மாற்றினார். அவரது அன்பு என்னை முற்றிலும் தடுத்தாட்கொண்டுள்ளது. நீங்களும் இறைவார்த்தையை வாசித்தால் அவர் உங்களை மாற்றுவார்” என்றார். எனவே பிட்ஸ்மோவும் பைபிளை வாசிக்கத் தொடங்கினார்.

மத்தேயு நற்செய்தியின் கடைசிப் பகுதியில் வருணிக்கப்பட்டுள்ள இயேசுவின் பாடுகளும் அவரது மன்னிக்கும் அன்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இதுவரை எந்த எதிரியையும் கொல்வதற்கு மட்டுமே அறிந்திருந்த பிட்ஷ்மோ, எதிரியை நேசிக்கவும் கற்றுக் கொண்டார். எனவே அவர் தமது வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார். உலகம் முழுவதும் சென்று நற்செய்தியைப் பறைசாற்ற விரும்பினார். நம் ஆண்டவர் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சிலுவையில் கிடந்து ஜெபித்த ஜெபம் கன்னெஞ்சம் படைத்த தளபதியின் உள்ளத்தை உருக வைத்தது. அவரை நற்செய்தியின் ஊழியராகவும் மாற்றியது.

கடவுளுக்கு ஏற்புடையதுதானா?

“”எனக்கும் இந்த நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன்மூலம் நான் இந் நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை” (எசேக். 22:30). இங்கே சொல்லப்படும் “தடுப்பவன் ஒருவன்’ கடவுளுக்கும் மனிதருக்குமிடையே மத்தியஸ்தம் செய்பவனைக் குறிக் கிறது. புனித பவுல் இதனையே இன்னும் வலிலõயுறுத்திக் கூறுகிறார்: “”அனைவருக்காகவும் மன்றாடுங்கள். இறைவனிடம் வேண்டுங்கள். பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலிலõல் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப்பற் றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர்நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும்” (1 திமொ. 2:1þ3).

உலகம் முழுவதற்குமாகப் பரிந்து பேசுவதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே தான் நம்மை அரச குருத்துவத்திருக்கூட்டம் என்கின்ற னர். பாவிகளைக் கடவுளோடு இணைக்கும் ஒரு பாலத்தைக் கட்டி முடிப்பதற்காகவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்.

நிலநடுக்கத்தைத் தடுக்கும்

ஒரு தியான நிகழ்ச்சியில் சோதோம் கோமோராவின் கதையை விளக்கி பரிந்துரை ஜெபத்தின் தேவையை உணர்த்தினேன். அப்போது வயதான கன்னியாஸ்திரீ தமது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் இரவு முழுவதும் நற்கருணை எழுந்தேற்றி கேரளத்துக்காக ஜெபிப்பது எனத் தீர்மானம். ஜெபமும் ஆரம்பமானது. அன்றிரவு மடம் அமைந்திருந்த பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம்! மடத்தில் இருந்த யாருக்குமே எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதே நாள் இரவு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் ஆயிரக் கணக்கா னோர் இறந்தனர். அன்று இரவில் அதே போன்ற நிலநடுக்கம் கேரளத்தில் ஏற்பட்டிருக்குமா னால் அநேகம் நதிகளும் அணைகளும் உடைபட்டு பெருஞ்சேதம் ஏற்பட்டிருக்கும் உண்மையில் கேரளத்தை கோட்டை கட்டிக்காத்தவர்கள் இந்தக் கன்னியாஸ்திரீகளே.

புனித ஜாண் மரிய வியானியின் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி வாடினர். இப்புனிதர் நடத்திவந்த ஓர் ஆதரவற்றோர் இல்லமும் பஞ்சத்திற்குத் தப்பவில்லை. சுமார் மூன்று நாட்கள் உண்ண எதுவும் கிடைக்காததால் அங்குள்ளவர்கள் மிகவும் வருந்தினர். புனித மரிய வியானி தமது ஆதரவற்ற குழந்தைகளை நோக்கி, “”வாருங்கள், நாம் உணவறைக்குச் செல்வோம்” என் றார். அப்போது அப்பிள்ளைகள், “”சுவாமி, நேற்றும் அதற்குள் போய்ப் பார்த்தோமில்லையா?” எனக் கேட்ட னர். அதற்கு அவர், “”நாம் இரவு முழுவதும் ஜெபித்தோமே, எனவே, நம்பிக்கையோடு வாருங்கள்” எனச் சொல்லிலõக் கொண்டே அறையைத் திறந்தனர். அங்கே தானியங்களும் காய் கனிகளும் மூட்டை மூட்டையாய் இருந்தன!

எவ்வளவு தூரத்திலானாலும்!

சீனாவைச் சிலõலிர்ப்பூட்டிய நற்செய்திப்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஹேன்சன் டெய்லர். இளமையில் நாத்திகராய் இருந்த இவர் ஒருநாள் தமது தந்தையின் அறையில் இருந்த ஒரு நூலை எடுத்து வாசித்தார். அன்றிலிலõருந்து இயேசுவின் நெறிகளை அறியத் தொடங்கினார். தம்மை மறந் தார். தலைவன் தாளே தலைப்பட்டார். பத்து நாட்களுக்குப் பின் அவர் தம் தாயிடம், “நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தேன்’ என்றார். அதற்கு அவன் தாய், “”நீ உன்னை ஒரு நான்கு மணிக்குத்தானே அர்ப்பணித்தாய்” எனக்கேட்டார். அது கேட்டு ஆச்சரியப்பட்ட அவர், இவ்வளவு தொலைவில் இருந்த தம் தாயிடம் இதை எப்படி உணர்ந்தீர்கள்? எனக்கேட்டார். அதற்கு அத்தாய், “”அன்று காலை முதல் நான் உனக் காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது கிட்டத்தட்ட மாலை நான்கு மணிக்கு தூய ஆவியின் அபிஷேகம் என்னை ஆட்கொண்டது. இனந் தெரியாத ஒரு மகிழ்ச்சியால் நான் நிறைந்தேன். கடவுள் என்னைத் தொட்டார் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்” எனப்பதிலளித்தார்.

நமது பரிந்துரை ஜெபங்களை கடவுள் விரும்புகிறார் என்று மட்டுமல்ல; அதை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கவும் செய்கிறார். இயேசு தம்மிடம் நம்பிக்கை கொள்கி றவர்களுக்காகவே இறைவனை வேண்டுகிறார். ஆனால் உலகம னைத்திற்குமாக ஜெபிக்க வேண்டிய பொறுப்பை அவர் நம்மிடமே விட்டுச் சென்றுள்ளார்.

ஆகவே, நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரையும் நமது ஜெபங்களில் நினைவுகூர்ந்து பரிந்துரை ஜெபத்தின் தூதுவர்களாய் மாறக் கடவோம்.

Share:

Dr. John D.

Dr. John D. is a renown Catholic preacher and televangelist. Based in India, Dr. John has led retreats around the world for many ministries, including Shalom Media.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles