Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 23, 2020 1867 0 Shalom Tidings
ஈடுபடுங்கள்

விதிர்க்க வைத்த ஐயவினா!

கேள்வி கேட்பதும் விடை சொல்வதுமெல்லாம் மனித சகஜம். ஆனால் சில கேள்விகளுக்கு விடை அரிது. அப்படிப்பட்ட ஒரு கேள்வி இன்னும் என்னை நோக்கி அம்பாகப் பாய்கிறது. எனக்குக் குருப்பட்டம் கிடைத்த சில நாட்களில் நான் இந்த கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது.

அப்போது நான் ஓர் ஆலயத்தில் உதவிப்பங்குத்தந்தை. அருகில் அருட்கன்னியர்களால் நடத்தப்படும் ஒரு கருணை இல்லம். அங்கு ஊனமுற்ற சிறுவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் சாதிமத பேதங்கள் ஏதுமில்லை. அன்றாடம் காலை யில் எல்லாருமே திருப்பலிலõக்காக ஆலயத்திற்கு வருவார்கள்.

ராமு கேட்டான் ஒரு கேள்வி

அவர்களில் இந்து மாணவ னாகிய ராமு என்னும் ஒரு பையன் என்னைக் கவர்ந்தான். அவனுடைய பிரார்த்தனை அனைவரது உள்ளங்களையும் சுண்டி இழுத்தது. ராமுவின் கண்களுக்குப் பார்க்கும் சக்தி இல்லை. ஆனால் அவன் முகத்தில் இருந்த கருப்புக் கண்ணாடியும் கையிலே இருந்த திசையறியும் கோலும் அவனுக்குக் குறையொன்றும் இல்லை என்ற நினைப்பையே தந்தது. அவனுடைய கைக்கோல் அவன் வாழ்க்கைக்கான உந்து கோல் என்றே எனக்குப்பட்டது.

ராமுவைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய நேர்ந்தபோது என் உள்ளம் வலிலõத்தது. ஒரு பிச்சைக்காரக் கும்பலிலõடம் அகப்பட்ட ராமுவின் இரு கண்களும் ஈவிரக்கமில்லாமல் நோண்டி எடுக்கப்பட்டன. பிறகு காவற்படையினரால் காப்பாற்றப் பட்டு இவ்வில்லத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறான். அவன் முகத்திலிலõருந்த கருப்புக் கண்ணாடி அவனுக்குள் வன்முறையைத் தூண்டவில்லை. மாறாக, இரக்கவுணர்வையே ஏற்படுத்தியது. ஒருநாள் நான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அது எனக்கும் அவனுக்கும் ஆறுதலாக இருந்தது.

ஒரு நாள் நான் திடீரென சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த் தேன். அதோ ராமு தரையில் விழுந்து கிடக்கிறான். உதவி கேட்டு அழுகிறான். எழும்ப முயன்றும் முடியாமல் தவிக்கி றான். சுதாரித்துக் கொண்ட நான் ஓடிப்போய் அவன் கரங்களைப் பிடித்தேன். அவனுடைய கையில் இருந்த திசையறியும் கோல் எங்கோ தூரத்திலே விழுந்து கிடக்கிறது. கருப்புக் கண்ணாடி உடைந்து முகத்தின் விகாரம் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து என் நெஞ்சு பதறியது. அவனைத் தூக்கினேன். அவனும் அழுகையை நிறுத்தி என்னிடம் கேட்டான் : “நீங்கள் கிறிஸ்துவா?’

வினவிய வினாவுக்குப் பதில் தர….

நானும் தனித்திருந்து ஜெபிக்கும் நேரங்களில்…. நான் என்னோடு கேட்கும் கேள்வியைத்தான் ராமுவும் கேட்டான். அவன் கேட்ட கேள்விக்கு விடை இல்லைதான். ஆனால் உண்மையில் இறைவனின் அழைப்பு என்ற மகத்தான வரத்தைப் பெற்ற போதும்; குருப்பட்டம் என்ற பெருங்கொடை கிடைத்தபோதும், அன்றாடம் கிறிஸ்துவைக் கைகளால் எடுத்த போதும், அவரது உடலுதிரங்களை அனுதினம் உண்டு பருகிய போதும் என்னால் ஏன் இன்னொரு கிறிஸ்துவாய் மாறமுடியவில்லை?

உண்மையில் ஒவ்வொரு நாளும் மனமாற்றத்தின் நாளாக மாற வேண்டும். கிறிஸ்துவைப் பிறருக்குக் காட்டுவதில் நான் தோற்றுப்போன தினங்களுக்காக மனம் வருந்த வேண்டும். இனி வரக்கூடிய நாட்களாவது அவருடைய பாதச்சுவடுகளை அடியொற்றிச் செல்லும் நாட்களாக இருக்க வேண்டும்.

இரண்டாம் கிறிஸ்துவாக புனித பிரான்சீஸ் அசிசியார் அறியப்படுகிறார். தந்தையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அவர் தைத்துத்தந்த உடைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு ஏழைகள்பால் கொண்ட அன்பினால் தெருவில் நடந்தாரல்லவா? இது மட்டுமா? சின்னஞ்சிறிய செயல்களின் மூலம் ஆன்மாக்களின் மீட்புக்காகப் புறப்பட்டாரே குழந்தை தெரசா. ஆம். புனித ஆளுமைகள் அனைத்தும் இயேசுவை உலகிற்கு விதந்தோதிய தியாகச் செம்மல்களே. அப்பம், அதிகாரம், விசுவாசம் இவற்றின் மூலமாய்த் தம்மை சோதிக்க வந்த சாத்தானை ஜெபதபங்களாலும் பிராயசித்தங்களாலும் இயேசு வென்றார். இன்றும்கூட இவை போன்றவற்றால்தான் அலகை மனித குலத்தையே கிறங்கடிக்கி றான். இத்தகைய சாத்தானின் நயதந்திரங்களை நாசூக்காக எதிர்கொள்ள ஜெபவாழ்வே நமக்குத் துணை.

சிரிக்கும் கிறிஸ்துவை, நடிக்கும் கிறிஸ்துவை, பந்தாடும் கிறிஸ்துவை உலகம் விரும்பி ஏற்கும். ஆனால் துன்புறும் இயேசுவை எந்த உலகம் விரும்பி ஏற்கும்? ஆனாலும் அவரே இறைமகன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க நம்மால் இயலட் டும். வெறுப்புள்ள இடங்களில் அன்பையும் துயர்மிக்க இடங்களில் மகிழ்வையும் அளித்து முன்மாதிரியாக வாழ நாம் அனைவரும் முற்படுவோம்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles