Home/ஈடுபடுங்கள்/Article

மார்ச் 03, 2020 1915 0 Shalom Tidings
ஈடுபடுங்கள்

இப்படியெல்லாம் வினவியதுண்டா?

இரண்டு நாள் நீடிக்கும் ஒரு சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது. காலையில் எல்லாரும் பேருந்தில் ஏறியவண்ணம் இருந்தனர். இதற்கிடையில் எல்லாருடைய கண்களும் ஒரு பெண்மணியைச் சுற்றியே சுழன்றன. அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் வந்திருந்தார். கால்களால் வேகத்தில் நடக்க முடியவில்லை. அவருக்கு உதவியாகக் கணவனும் வந்திருந்தார். அவர் ஒருவழியாகப் பேருந்தில் ஏறி அமர்ந்தார். அமர்ந்த கையோடு புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இதைக்கண்ட பிறர் அவரை ஏளனமாக நோக்கினர். சிலர், இந்த வயதில் என்ன போட்டோ வேண்டிக் கிடக்கிறது என்றனர். மற்று சிலர், இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படியரு பயணம் தேவையா? என நகைத்தனர். சிலர் நேரடியாகவே அவரிடம் கேட்டனர்: என்ன, காலுக்குப் பிரச்சனையா? அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “எலும்புப் புற்றுநோய் வந்தது. ஓர் அறுவை சிகிச்சையும் முடிந்தது. இனியும் ஒருசில அறுவை சிகிச்சைகள் பாக்கியுள்ளன. ஆபத்தும் இல்லாமல் இல்லை. இப்போது வலி கொஞ்சம் குறைவு. அடுத்த அறுவை சிகிச்சைக்கு முன் காண வேண்டிய இடங்களை ஓரளவு கண்டு முடிப்பதே லட்சியம்..!” பிறகு யாரும் அவரிடம் கேள்வி கேட்கவில்லை.

டயஸ் போள் மஞ்ஞளி

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles