Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 28, 2020 2001 0 Sister Mary Mathew
ஈடுபடுங்கள்

அழாதீர்

“”அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென் றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கிவந்தபோது இறந்த ஒருவரைச் சிலர் தூக்கிவந்த னர். தாய்க்கு அவர் ஒரே மகன். அத்தாயோ கைம் பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர் அவர்மீது பரிவுகொண்டு “அழாதீர்’ என்றார்” (லூக். 7:11þ13).

கைம்பெண் என்பவள் ஒரு சிறகொடிந்த பறவை. ஒன்றாகவே சிந்தித்து, ஒன்றாகவே வேலை செய்து, ஒன்றாகவே உண்டுறங்கி, ஒன்றாகவே சிறகடிக்கும் கனவுகள் தம்பதிகளுக்கே சொந்தம். ஆனால் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனும் ஒற்றைச் சிறகுள்ள பட்சிக்கு ஒப்பாவர். இன்று முதல் நீங்கள் இருவரும் ஓருயிரும் ஈருடலுமாய் இருக்கிறீர்கள் என்னும் வாழ்த்தில் வதியும் வலிலõமை எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்பதை இருவரில் ஒருவர் உதிரும் போதே தெரியவரும். விவிலிலõயத்தில் நாம் சந்திக்கும் கைம்பெண் தன் உயிரை இப்போதும் தக்க வைத்திருப்பது தன் ஒரே மகனுக்காக மட்டுமே. அம்மகனும் போய்ச் சிறகொடிந்தவள் போல் ஆனாள். ஆறுதலுக்கு ஒரு வார்த்தை இல்லாத பெருங்கூட்டம் அவளோடு நடக்கிறது. இந்நிலையில் அவளைக் கண்ட ஆண்டவர் அவளிடம் பரிவுகொண்டு “அழாதீர்’ என்றார். இவ்வாறு உலகிற்கே ஆறுதலாக விளங்கும் ஆண்டவரை நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்கூற வேண்டாமா?

“அழாதீர்’ எனச் சொல்லõலி விட்டு அசட்டையாகச் செல்ப வர் அல்ல நம் ஆண்டவர். அவர் முன்னால் சென்று பாடையைத் தொட்டார். பிறகு இறந்து கிடந்தவனை நோக்கி “எழுந்திடு’ என்கிறார். ஒருவேளை ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லõலி விட்டு அலட்சியமாகப் போகிறவர்களாக இதுவரை நாம் இருந்திருக்கலாம். இனி நாம் அப்படி இருத்தலாகாது. அழுகைக்குப் பின்னால் மறைந் திருக்கும் காரணத்தை அறிந்து அதற்குத் தீர்வு காண முடிந்தால் மிகவும் நல்லது. ஏனெனில், முன்னோக்கி வந்து பாடையைத் தொட்டு நிறுத்தி அதற்குள் இருக்கும் சடலங்களுக்கு உயிர் தந்து உரியவர்களிடம் ஒப்படைக் க வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம்தான் விடப்பட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் கருணை. தங்கள் வாழ்க்கைகளில் செத்துப் போய் சலனமற்றிருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குப் புதுவாழ்வு கொடுங்கள். இந்தப் பாடையும் பாடைக்குப் பின்னால் கைம்பெண்ணும் நமது வீடுகளிலும் வீட்டுப்புறங்களிலும் ஏன் உலகம் முழுவதிலும் பரவலாக உண்டு என்பதை யாரும் மறக்காதீர்கள்.

இது நம்மால் முடிகிற கதையா?

நன்மை செய்வதற்கான ஓர் உந்துதல் உதிக்கும் போதே இயலாமைகளின் பற்பல பல்லிலõலிளிப்புகள் வெளியே துருத்தத் தொடங்கும். 1 அரசர் 17:17 முதலான வாக்கியங்களில் எலிலõலியா இறைவாக்கினர் இறந்துபோன ஒரு குழந்தைக்குப் புத்துயிர் தரும் ஓர் அதிசயத்தை வாசிக்கிறோம். 2 அரசர் 4:32 முதலான பகுதியில் இன்னொரு உயிர்ப்பித்தலும் ஒப்படைப்பும் இருப்பதைக் காண்கிறோம்.

யார் இந்த எலிலõலியா? “”அவர் நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தான். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார். மூன்று ஆண்டு ஆறுமாதம் மழை இல்லாமல் போயிற்று” (யாக். 5:17). எலõலிலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர் என்பதை இறைவார்தை எவ்வளவு தெளிவாகச் சொல்கிறது எனப் பாருங்கள். எனினும் தேவைகளில் உழல் வோரைப் பார்க்கும் போது நம் உள்ளங்கள் உருகுகின்ற னவா?

ஆகையால் நாம் நமக்கிருக்கும் காயங்களையும் குறைகளையும் பொருட்படுத்தாமல் பிறருடைய காயங்களைக் கட்டி மருந்திட முன்வருவோம். கருணையின் ஜெபமாலையைத் தவறாமல் சொல்வோம். கருணையின் ஒரு சிறிய செயலையாவது அன்றாடம் மறக்காமல் செய்வோம். “”உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (லூக். 6:36). இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத். 5:7)

ஆண்டவரே, உமது கருணையின் முகத்தை நான் உலகினர்க்கு வெளிப்படுத்த நீர் உமது கனிவார்ந்த பார்வையை என்பால் திருப்பியருளும். ஆமேன்.

Share:

Sister Mary Mathew

Sister Mary Mathew

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles