Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 28, 2020 1932 0 Shalom Tidings
ஈடுபடுங்கள்

மகிழ்வோம்!

தியான நிகழ்ச்சியின் போது ஒரு தாய் தன் பையனுடன் ஜெபிக்க வந்தாள். அவன் பிறப் பிலேயே உடல் அங்கங்கள் அத்தனையும் தளர்ந்து போன சிறுவன். வயது பதினாறு. அவனது முகம் தேவதூதனின் முகம் போல் மின்னியது. நான் அவனுக்காக ஜெபித்தேன். பிறகு அத்தாயின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். அப்போது அவள் அழுதுகொண்டிருந்தாள். தழுதழுத்த குரலõலில் அவள் சொன்னாள்: “”சுவாமி, ஒரு புண்ணியவாளனுக்குப் பிறப் பளித்த புனிதவதி நான்! கடவுளிடம் எனக்கு எந்த முறையீடும் குறைபாடும் இல்லை”. ஊனமுற்ற ஒரு தாயின் கதறல் கள் என் மனச்சான்றைக் குத்துவதாய் இருந்தது.

இப்பூமியில் மனிதனாய் பிறந்த யாருக்குமே துன்பங்கள் உண்டு. விபத்துகள், வியாதிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு உபாதைகள் அவ்வப்போது நம்மை பதம்பார்க்கத்தான் செய்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? நல்லவர்கள் கூட துன்பங்களுக்குத் தப்புவதில்லையே!

“”என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள். இழிவு வரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது. ஏற்புடைய மனிதர் மானக்கேடு என்னும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகி றார். துன்பமென்னும் உலையில் ஆண்டவர் தம் அன்பர்களைச் சோதிக்கிறார். ஆண்டவர் யாரை நேசிக்கிறாரோ அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கிறார். பொன் நெருப்பினால் புடமிட்டுச் சோதிப்பதைப் போல் ஆண்டவர் தம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களைப் புடமிட்டு சொந்த மாக்குகிறார்.

துன்புறும் மனிதர்கள் ஆண்டவருக்குக் கண்மணிகள் போல்வர். “”என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றி னத்தாரைக் குறித்து உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்கிறார்” (செக். 2:8). கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளுக் கடியில் பாதுகாப்பதைப் போல் கடவுளும் தம் அன்பர்களைத் தம் சிறகடியில் பாதுகாக்கிறார்.

உனது கவலைகளில் உன் னோடு இருக்கிறவர், உன்னை தம் கைகளில் தாங்குகின்றவர் உனது வலிலõகளின் போது உன்னைக் கைவிட மாட்டார்.

என் மனம் சோர்ந்து போகலாம். என் உடல் தளர்ந்து போகலாம். அப்போதும் கூட ஆண்டவரே என் வலிலõமையாய் இருக்கிறார். உண்மையில் வலிலõகளே நமது வலிலõமை. அதுவே நம்மைக் கடவுளோடு இணைக்கிறது. ஆகவே துன்பங்களை முன்னிட்டு நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். “”இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்” (உரோ. 8:18).

ஆகவே, துன்பங்களைப் பற்றிய நமது மனப்பான்மைகள் முற்றிலும் மாற வேண்டும். இறைமகன் மனிதராக இம்மண்ணில் பிறந்த போது அவரும்கூட துன்பங்களுக்குத் தப்பவில்லை. அவர் பட்ட அகோரப் பாடுகளைப் பார்த்தால் நம் பாடுகள் எம்மாத்திரம்? உண்மையில் நாம் தியானிக்க வேண்டியது இப்போதைய துன்பங்களை அல்ல; மாறாக வரப்போகும் மாட்சியைத்தான். இறைமகனின் பங்காளிகளாக விரும்புவோர் அவர் சென்ற அதேவழியில் செல்லதான் வேண்டும். அவர் துன்பம், சிலுவை, மரணம் போன்ற ஒடுக்கமான வழிகளினூடே நடந்து சென்றார். மரணம் வரும்வரை அவர் தம் உடலை அதற்காகக் கையளித்தார். அவர் பட்ட பாடுகளால் நாம் மீட்படைந்தோம். ஆகவே நமது துன்பங்களுக்கும் அர்த் தம் உண்டு. இயேசுவோடு சேர்ந்து நாமும் சகிப்போம். அவரது சிலுவையைக் கட்டிப் புணர்வோம். சிலுவையில் அறையுண்டவரின் காயங்களை எண்ணிப் பார்ப்போம். “”கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேது. 4:13)

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles