Home/என்கவுண்டர்/Article

ஜன 23, 2020 2246 0 K J Mathew
என்கவுண்டர்

உனக்காகவே காத்துக்கொண்டிருக்கிறார்

தேவ நற்கருணையில் கடவுளின் பிரசன்னம் இருக்கிறதா? வெறும் ஓர் உயிரற்ற அப்பத்துண்டில் உயிருள்ள கடவுள் உறைகிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? ஒருவர் ஆலயத்திற்குள் நுழைந்தால் முதலில் அவரது கண்ணில்படுவது நற்கருணைப் பேழை. அப்போது அவரது நெஞ்சில் மேற்படி எண்ணங்கள் நெருடுவது இயல்பு.

இறுதி இராவுணவின்போது இயேசு நற்கருணையை நிறுவினார். அன்றிரவு அவர் தம் சீடர்களோடு பந்தி அமர்ந்திருக்கிறார். அவர்களைத் தனியாக விட்டுச் செல்ல இயேசுவின் மனம் ஒப்பவில்லை. ஆகவே, அச்சீடர்கள் தம்மீது நம்பிக்கை கொள்ளவும், தம் வார்த்தைகளைக் கடைப்பிடித்துத் தம்மோடு உறவாடி மகிழவும் வேண்டுமென இயேசு ஆசை மேல் ஆசைப் படுகிறார்.

அன்பார்ந்த முடிவின் சின்னம்

“தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்துசேருவர் என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” (யோவா 6:37) என்கிறார் நம் ஆண்டவர். இது வெறும் பசப்பு என நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. இதுவே இயேசுவின் இதயத்திற்குரிய ஒரு மாறாத இயல்பு. “இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்னும் அவருடைய வாக்குறுதியை எழுத்துப் பிறழாமல் காப்பாற்ற அவர் முடிவு செய்ததன் வெளிப்படையான அடையாளமே தேவ நற்கருணை.

தமது உயிரை மனுக்குலத்தின் மீட்புக்காகக் கையளிப்பதால் மட்டும் அவர் நிறைவடைந்து விடுவதில்லை. அவர்களுக்கு ஊட்டமளித்து மேன்மேலும் அவர்களை வளர்த்தெடுக்கவே அவர் விரும்புகிறார். நாம் நமது பயணங்களில் உணவையும் அக்கறையோடு எடுத்துச் செல்வதில்லையா? அதுபோலவே மனிதனின் ஆன்மீகப் பயணத்தில் அவனுக்கு ஊட்டமளிக்க அவரே உணவாக மாறினார். “”வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருவோருக்குப் பசியே இராது” (யோவா 6:35). இவ்வாக்குறுதியின் நிறைவாக்கமே தேவநற்கருணை.

இயேசு செய்த அற்புதங்களில் தேவநற்கருணையே மிகவும் பெரியது. அதுதான் இன்றும் இடையறாமல் தொடர்கிறது. அவர் தமது இறுதி இராவுணவின்போது அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றிசெலுத்திக் கூறியதாவது: இது உங்களுக்காகப் பிட்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்”. குருக்கள் அனுதினம் தேவாலயத்தில் அப்பத் தை எடுத்து இந்நிறுவுக்கூற்றுகளை உச்சரிக்கும்போது வெறும் அப்பம் திருவப்பமாய் மாறுகிறது. அவ்வப்பம் இயேசுவின் திருவுடலாகவும் மாறுகின்றது.

தேவநற்கருணையில் உள்ள இயேசுவின் உயிர்ப் பிரசன்னத் திற்கு அவருடைய வார்த்தைகளே சாட்சி. வானமும் பூமியும் அழிந்தாலும் அவரது வார்த்தைகள் அழியவே அழியா என அவரே அருளிச்செய்துள்ளார். இயேசு உண்மையானவர். எனவே தேவ நற்கருணையைக் குறித்த அவருடைய வார்த்தைகளும் உண்மையானவை. அவர் தமது வாக்குறுதிகளில் நம்பகமானவர். அவர் கூறிய அனைத் தையும் அவர் நிறைவேற்றுகின்றார். அப்படியானால் தேவநற்கருணையைப் பற்றி அவர் கூறியவற்றையும் நிறைவேற்றுவார். இயேசுவின் மற்றெல் லா வாக்குறுதிகளையும் உறுதியாய் நம்பும் நாம் தேவநற்கருணையைக் குறித்தான வாக்குறுதியை மட்டும் நம்பாமல் சந்தேகப்படுவது மிகப்பெரும் முரண்நகை அல்லவா?

ஓர் அனுபவம்

இறைமகனாகிய இயேசுவே நற்கருணை. குரு அப்பத்தை எடுத்து உயர்த்தி ஆசீர்வதிக்கும்போது இயேசுவே தம் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவு. அப்போது அவரே நம் உடற்பிணிகளைத் தீர்க்கிறார் என்பதற்கு நான் ஓர் அனுபவ சாட்சியம் கூறட்டுமா? இது ஒரு தனிநபரின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் புரட்டிப்போட்ட அனுபவம். அவரது பெயர் பெத்ரே அரூபே. இவர் 1965 முதல் 1983 வரை நெடுங்காலம் இயேசு சபையின் மேலவராக இருந்தார். இயேசு சபை குருக்களுக்கு இவர் மிகவும் பிடித்தமானவர். இவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக இயேசு சபை இல்லங்கள் பலவும் “அரூபே இல்லம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளன. இயேசு சபையின் இரண்டாவது நிறுவனர் என்ற பாராட்டும் இவருக்கு உண்டு. அந்த அளவுக்கு அவருடைய செல்வாக்கு ஓங்கியிருந்தது.

ஆயினும் அவரது இந் நம்பிக்கையை அவர் நடத்திய ஓர் ஆன்மீக யாத்திரை மாற்றிவிட்டது. மாதா காட்சி கொடுத்த லூர்து பயணமே அது. அன்று வரை அவர் ஒரு மருத்துவ மாணவனின் கண்களாலேயே இவ்வுலகத்தைப் பார்த்தார். நவீன மருத்துவ உலகம் கைவிட்ட ஏராளம் பிணியாளர்கள் லூர்திலே வந்து நலம் பெற்றுச் செல்கின்றனர். தேவநற்கருணை பவனி வரும்போதுதான் அநேகமாய் அற்புதங்கள் அங்கே நிகழ்கின்றன.

அரூபேயின் இதயத்தை மாற்ற இயற்கைக்கு மாறான ஓர் அதிசயம் தேவைப்பட்டது. அதற்காகக் கடவுளும் அவருக்கோர் வாய்ப்பினை வழங்கினார் அவர் நின்றிருந்த இடத்திற்கு அருகிலே இளம்பிள்ளை வாதத்தால் முடங்கிப்போன ஒரு பாலனைக் கிடத்தியிருந்தனர். நற்கருணைப் பவனி அவ்வழியே வந்தபோது குருவானவர் கரமுயர்த்தி ஆசீர்வதித்தார். அப்போது அது நிகழ்ந்தது. ஆம். படுத்த படுக்கையாய்க் கிடந்த அப்பாலன் எழுந்து உட்கார்ந்தான். அரூபேவுக்கு தமது கண்களையே நம்ப முடிய வில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனா நாட்டில் நடந்து சென்ற இயேசு இன்றும் வாழ்கிறார் என நம்பிட அரூபேவுக்கு வேறொன்றும் தேவைப்படவில்லை.

உலகமே சிறுகும் போது

இந்த வியப்பூட்டும் நிகழ்வைக் குறித்து அரூபே இங்ஙனம் எழுதியுள்ளார் : “”நான் இயேசுவின் அருகிலே நிற்பதுபோல் எனக்குத் தோன்றிற்று. அவருடைய தெய்வீக வல்லமையை நான் உய்த்துணர்ந்த நிமிடங்கள் அவை. அப்போது என்னைச் சுற்றிலும் உள்ள பரந்த உலகம் சிறுகுவது போல் எனக்குத் தோன்றிற்று”. பின்னர் அவர் லூர்தி லõருந்து மாட்ரிடுக்குத் திரும்பி னார். ஆயினும் அன்றிலõலிருந்து தமது மருத்துவப் படிப்பை அவரால் தொடர முடியவில்லை.

அவர் அக்காலத்தை நினைவு கூர்வது இப்படி : “”மருத்துவப் புத்தகங் கள் என் கையிலõலிருந்து நழுவுவதைப் போல் இருந்தன. மனித உடலõலில் நான் செய்து பார்த்த பரிசோதனைகளைக் குறித்து அப்போதெல்லாம் வாய்கிழியப் பேசுவது என் வழக்கம். ஆனால் இப்போது அவையனைத்தும் பொருளற்ற வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. இப்போதெல்லாம் குருவானவரின் நற்கருணை ஆசீரும் அப்பையனின் துள்ளி எழுதலுமே என் உள்ளம் நிறைந்த எண்ணங்களாக இருக்கின்றன.

இயேசுவின் அன்பு அரூபேவை ஆட்கொண்டது. அவரும் தடுத்தாட்கொள்ளப்பட்டார். ஒரு குருவானவராய் மாறுவது மட்டுமே இப்போதைய ஒரே நோக்கம். கடவுளைக் கையில் ஏந்தும் மகா பாக்கியமுள்ள வாழ்க்கைக்காக அரூபே தம்மைக் கையளித்தார். இதற்காகவே அவர் இயேசு சபையில் சேர்ந்தார்.

அன்பர்களே, இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார். உயிரின் இறை வனாகிய அவர் உங்கள் மீது கொண்ட அன்பினால் தமது இன்னுயிரை நீத்து உங்களுக்காக ஓர் அப்பமாகி இதோ ஆலயப் பேழைக்குள் காத்திருக்கி றார். நீ இப்போது கவலையில் ஆழ்ந்துபோய் இருக்கிறாயென்றால் அவர் உன்னைத் தேற்ற ஆயத்தமாய் இருக்கிறார். நீ மனம்சோர்ந்து போனால் அவர் உன்னை பலப் படுத்த உறுதி பூண்டுள்ளார். உன் உற்றார் உறவினர்கள் உன் னைக் கைவிட்டாலும் உன்னைக் கைவிடாதவர் இதோ உனக்காகவே இருக்கிறார். நீ பாவ வழியில் நெடுந் தூரம் போய்விட்டாயா? கவலைப் படாதே. அவரிடம் திரும்பிவா. ஏனெனில் அவரிடம் நம்பிக்கை கொண்டிருப்போருக்கு என்றுமே தாகம் இராது (யோவா 6:35). அவரிடம் வந்து அவருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள். அவருடைய சமாதா னம் உங்களை வழிநடத்தும்.

ஜெபம் : நற்கருணை நாதா, நீர் மெய்யாகவே தேவநற்கருணையில் எழுந்தருளி இருக்கிறீர். நான் உம்மை மனமுவந்து ஆராதிக்கிறேன். நான் உம்மை அகந்திறந்து காண்பதற்காக நீர் என் அகக் கண் களைத் திறந்தருளும். என்னோடு வசிப்பதற்காகவே உயிர்விட்ட உமது பேரன்பு என் உள்ளத்தை அன்றா டம் நிறைக்கட்டும். அவ்வாறு என் வேட்கை தணியட்டும. நற்கருணையின் அன்னையே எனக்காக வேண்டிக்கொள்ளும். புனித சூசையப்பரே எனக்காக மன்றாடும் ஆமேன்.

Share:

K J Mathew

K J Mathew

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles