Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 24, 2020 1971 0 Stella Benny
ஈடுபடுங்கள்

பணிவின் பல வழிகள்

அது ஒரு மருத்துவமனை. நான் அங்கே மருத்துவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்தேன். அப்போது கழிவறைக்குப் போகத் தோன்றியது. அங்கேயும் பலர் வரிசை பிடித்துக் காத்திருக்கின்றனர். உள்ளே போய் வருவோர் தங்கள் சேலையைத் தூக்கிய வண்ணமாய் மூக்கைப் பொத்திக்கொண்டு முகம் சுளிக்க வெளிவருவதைக் கண்டேன். அங்ஙனம் வந்தவர்களில் ஒருத்தி, “பாத்துப் போங்கோ, உள்ளே சுத்தமே கிடையாது’ எனச் சொல்லிலõலிக்கொண்டே போனாள். இதைக் கேட்ட நான் போகவேண்டாமே என நினைத்தேன். ஏனென்றால் சுகாதாரமில்லாத கழிவறைகள் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. அப்போது என் முறை வந்தது. உள்ளே போனேன். அது இந்திய முறையிலானது. சுத்தம் சுத்தமாகவே எட்டிப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. பிரதான கட்டிடத்திலõலிலிருந்து சற்றே விலகி கொஞ்சம் ஒதுக்கிடமாய் இருந்தது அக்கழிவறை. மண் தரையைத் தாண்டித்தான் உள்ளே வரவேண்டும். மழைக் காலம் வேறு. செருப்பில் அப்பிய சேற்றுடன் உள்ளே வரும்போது கழிவறை சீர்கெட அதிக நேரம் தேவைப்படாது. ஆக, கழிவறை முழுவதும் சேறும் சகதியும். நானும் ஒருவகையில் வெளியேற கதவின் கைப்பிடியைத் தொடப் போனேன். அப்போது எனக்குள் ஓர் அசரீரி கேட் டது : “”வாளியில் கொஞ்சம் தண்ணீர் பிடித்து இக்கழிவறையை நீ ஏன் கழுவக்கூடாது? இனி வருபவர்களாவது மூக்கைப் பிடிக்காமல் போகட்டுமே”. கடவுளின் குரலோடு நான் மல்லுக்கட்டினேன்.

நான் எனக்குள் சொன்னது : “”இது பொது மருத்துவமனை. புறநோயாளிகள் பலரும் வந்து செல்வது. கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியாது”. அப்போது மீண்டும் அசரீரி: நோய் எதுவும் அணுகாது. வாளி நிறைய தண்ணீர் எடுத்து பீச்சியடித்தாலே போதும். கழிவறை சுத்தமாகிவிடும். இறுதியில் நான் தோற்றுவிட இறைவன் வெற்றி பெற்றார். கடவுளின் குரல் பணித்தவாறே நான் செய்தேன். இரண்டு மூன்று தடவை தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய் தேன். கழிவறை பளிச்சென்று இருந்தது. என் நெஞ்சுக்கு சற்றே நிம்மதி. அப்போது கடவுளின் வார்த்தை என் செவிகளில் முழங்கியது : “”இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக, தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது” (உரோ 14:17). இவ்வசனம் என் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். பலர் கழிவறைக்குள் மகிழ்ச்சியாகச் சென்றுவருவதைக் கண்டபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். தூய ஆவியின் சிறகடிச் சத்தம் மீண்டும் ஒரு முறை கேட்பது போல் இருந்தது. நான் இந்நாள் வரை இதைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

இன்னும் பல இடங்களில் கழிவறைகளைச் சுத்தம் செய்யவைத்து பணிவின் பாடங்களைக் கடவுள் எனக்குக் கற்றுத்தந்தார். இதனால் நான் ரொம்ப பணிவுடையவர் என்றோ, எந்தக் கழிவறையையும் கழுவத் தயார் நிலையில் உள்ளவள் என்றோ யாரும் கருதிவிடக்கூடாது. கழிவறைகள் அடுப்பாங்கரைபோல் அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டுமென்பதில் நான் மிகுந்த கண்டிப்பானவள். எனது அதீத சுத்தத்தால் என் பணிப்பெண்ணே என்னை விட்டுச் சென்றுவிட்டாள் என்பது வேறு கதை. இதிலிலõலிருந்து சுத்தத்தின் விஷயத்தில் நான் ரொம்பவும் கராறானவள் என்பது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட என்னைத்தான் கடவுள் பல்வேறு கழிவறைகளைக் கழுவவைத்து எளிமைப்படுத்தி இப்போது நான் இருக்கும் நிலைக்குக் கூட்டிவந்தார். அருள்வாழ்வு தியானங்களில் பங்கெடுப்பவர் களுக்காக கழிவறைகளைச் சுத்தப்படுத்திய கதைகளை சில வருடங்களுக்கு முன் ஷாலோம் டைம்சில் நான் எழுதியிருந்தேன்.

தூய ஆவியார் கற்றுத்தரும் சில பணிவின் பாடங்களோடு நாம் முழுமூச்சுடன் ஒத்துழைத் தால் மட்டுமே இறையாட்சியின் அனுபவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். தூய ஆவியின் இறையாட்சி அனுபவத்தை பதவி சுகங்களாலோ, பணபலத்தி னாலோ, கல்வி கேள்விகளாலோ, உடல்வலிலõலிமையினாலோ நாம் அடையவே முடியாது. உண்மையாகவே அது தூய ஆவியின் கொடை. ஆம். இது ஆவியின் தூண்டுதல்களுக்கு ஆமேன் எனச் சொல்லும் அனைவருக்கும் தூய ஆவியார் அருளும் அன்புப்பரிசு. தம்மையே தாழ்த்தி பிறருக்காக கையளிக்கும் பொருட்டு தூயஆவியின் கரங்களில் யார்யாரெல்லாம் தங்களை அர்ப்பணிக்கிறார்களோ அவர்களுக்கே கடவுள் இதனை அருளுகின்றார். உண்மையில் நாம் நம்மோடு மற்போர் செய்தாலன்றி இதனை அடைய முடியாது. “”திருமுழுக்கு யோவானின் காலம் முதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர் (மத். 11:12).

நம்மோடு எதிர்த்து நிற்கின்றவர்களை நாம் பகைவர்களாகவே காண்கிறோம். ஆனால் விண்ணரசைப் பொறுத்த மட்டில் சாத்தானுக்கப்புறம் எனக்கெதிரி நான்தான். நான் என்னுடனேயே மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
எனது விருப்பங்களின் அட்டவணை யில் இடம்பெற்றுள்ள எல்லாவற்றையும் அடைந்துவிடுவதாலோ அல்லது அனைத்தையும் இறைவேண்டல் மூலம் சாதித்துவிடுவதாலோ எனக்கு விண்ணரசின் அனுபவம் கிடைத்து விடாது. மாறாக, தூய ஆவியார் வழங்கும் மகிழ்ச்சி, நீதி, சமாதா னம் போன்றவையே விண்ணரசின் அனுபவம்.

இலட்சங்களால் அடைய முடியாது

உயர் பதவியில் இருக்கும் சிலர் அன்னைத் தெரசாவின் தொண்டு நிறுவனத்தைப் பார்க்கச் சென்ற னர். ஒரு நோயாளியின் அழுகிப் புழுக்கள் நெளியும் புண்களிலிலõலிருந்து கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் புழுக்களை நோண்டியெடுக்கும் ஓர் அருட்கன்னிகையைக் கண்டபோது அவர்கள் விக்கித்துப் போயினர். அவர்களில் ஒருவர் அக்கன்னியாஸ்திரீயிடம், “”எப்படி அம்மா உங்களால் இது முடிகிறது? லட்ச ரூபாய் கொடுத்தாலும் நான் இதைச் செய்யமாட்டேன்” என் றார். அதற்கு அக்கன்னியாஸ்திரீ மறுமொழியாக, “ஒன்றல்ல பத்துலட்சம் கொடுத்தாலும் நானும் இதைச் செய்திருக்கமாட்டேன். ஆனால் இப்போது என்னால் இதைச் செய்யாதிருக்க முடியவில்லை. ஏனெனில் இயேசுவின் அன்பு இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டுகிறது” என்றார்.

அது போகட்டும். அதிகம் பேசப்படாத “மிண்டா மடங் களுக்குச்’ சென்றிருக்கிறீர்களா? வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், நான்கு சுவர்களுக்குள்ளேயே காலமெல்லாம் அடைபட்டு, தேவநற்கருணையை மட்டுமே உணவாக்கி, ஏனைய அறுசுவை உணவுகளையெல்லாம் துறந்து, ஜெபதபங்களில் தங்களைக் கரைத்துக்கொள்ளும் கன்னியாஸ்திரீகள் இளமையை மட்டுமல்ல; முதுமையைக்கூட இங்கேயே செலவிட்டு வாழ்க்கையை ரசிக்கிறார்களே! அச்சகோதரிகளை அம்மடங்களுக்குள் கட்டிப்போடும் பின்னூட்டம்தான் என்ன? இயேசுவின் சாலப்பரிந்த அன்பல் லவோ? நாமெல்லாம் போடுகின்ற தப்புக்கணக்குகளைப் போல் இவர்கள் வாழ்க்கையைப் பாழாக்குவோர் அல்ல. தூய ஆவியுடன் இணைந்து வாழ்க்கையை ரசிப்பவர்கள்.

இந்த வரத்தைப் பெற்றது எப்படி?

தெருவோரமாய் மண்ணை அளைந்து திரியும் பாதுகாப்பற்ற குழந்தைகளை வாரிப்புணர்ந்து நல்லுணவும் உடையும் அளித்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக் கும் மேற்படி துறவற நங்கையர்கள் ஒரு பிள்ளைப்பூச்சி பெற முடியாததால்தான் இப்படிச் செய்கி றார்கள் என எண்ணுகிறீர்களா? இல்லை. இது கிறிஸ்துவின் மாறாத அன்புக்கு இவர்களின் பதிலுரை.

மேலும், தெருவிலே திரியும் மனநலம் தப்பியவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மருந்தும் இடமும் தந்து பராமரிக்கும் கிறிஸ்துவின் ஊழியர்கள் வேறு வேலையில்லாததால் அதைச் செய்யவில்லை. கிறிஸ்துவின் நீங்காத நிலையன்பு அவர்களை அப்படிச் செய்ய வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இங்ஙனம் எத்தனையோ பேர் கிறிஸ்துவின் அன்பி னால் தூய ஆவியின் தூண்டுதல் களுக்குக் கட்டுப்பட்டு ஆமேன் எனச் சொல்லõலிலி விண்ணரசின் சாட்சிகளாய் வலம்வருகின்றனர்!

காலம் இன்னும் முடிந்து விடவில்லை. இன்று நீங்கள் தூய ஆவியின் செயல்களோடு ஒத்துழைத்தால் உங்களுடைய வீடுகள், ஆலயங்கள், நிறுவ னங்கள் எல்லாமே இறையாட்சியின் கூடாரங்கள் ஆகிவிடும். தூய ஆவியுடன் ஒத்துழைக்க நீங்கள் தெருவில் இறங்க வேண்டியதில்லை. நம்முடைய வீட்டிலேயே, நம்முடைய இல்லாமைகளுக்கு மத்தியிலேயே நாம் இதைச் செய்யமுடியும். அதற்கு ஆமேன் என மட்டும் சொல்லுங்கள். என்னை அவர் கழிவறைகளைக் கழுவவைத்தார் என்பதற்காக உங்களையும் அங்ங னம் செய்யவைப்பார் என அஞ்சிப் பின்வாங்காதீர்கள். எனினும் இறையாட்சியின் அனுபவங்களை நாம் பெறுவதற்காக அவர் நம்மை எளிமை, வெறுமை போன்ற ஒடுங்கிய வழிகளினூடே நடத்துவார் என்பதை மட்டும் மறக்காதீர்கள். ஆதலால் நாம் நம்மையே அவருக்குப் பூரணமாய் அர்ப்பணிப்போம்.

ஆவியானவர் என்னை நடத்திடின்
அன்றாடம் விந்தை காண்கிறேன்.
ஆதலாலெந்தன் ஆவியே தேவா
போற்றுதும் நின்றன் பாதங்கள்!!


Share:

Stella Benny

Stella Benny

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles