Home/ஈடுபடுங்கள்/Article

ஜன 28, 2020 1475 0 Shalom Tidings
ஈடுபடுங்கள்

செல்வாவின் வண்ணப்பூக்கள்

டுமுறை நாட்களில் ஒவ்வொருவரும் செய்தவற்றை எழுதுமாறு மறைக்கல்வி ஆசிரியர் மாணவர்களைப் பணித்தார். அதற்காகப் பத்து நிமிடங்களை ஒதுக்கிய ஆசிரியர், சிறந்த பதிலுக்குப் பரிசும் வாக்களித்தார்.விடுமுறை நாட்கள் தொடங்கிய நாள் முதல் உறவினர்களின் வீட்டாருடன் வீகாலான்றுக்குப் போனது, போன்ற காரியங்களைப் பட்டியலிலõலிட்டு எழுதினான் வரதன். வேறு யாரும் வீகாலான்றுக்குப் போயிருக்கமாட்டார்கள் என்ற இறுமாப்பும் அவனுக்கு இருந்தது. அப்பா அம்மாவுடன் வயல்வெளியில் வேலை செய்த காரியங்களே பிரியனுக்கு எழுத இருந்த ஒரே காரியம். கார்ட்டூண் படங்களைப் பார்த் ததும் புதிய வீடியோ விளையாட்டுகள் வாங்கியதும் நிவேதிதன் குறித்த போது புதியதொரு சைக்கிள் வாங்கி ஓட்டிப்பார்த்ததை எழுதினான் கவுசிக். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எழுதி, காகிதத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஆனால் எந்த அவசரமும் காட்டாமல் வெகு நிதானமாக ஒவ்வொன்றும் யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருந்த இன் னொரு மாணவனும் அவ்வகுப்பில் இருந்தான். அவன் பெயர் செல்வா. அவனை ஆசிரியர் கவனித்தார். அவன் பொதுவாகவே சாந்தமானவன். நன்றாகப் படிப்பவன். அவன் தனது விடைத்தாளைக் கடைசியில்தான் கொடுத்தான். ஒன்றோ இரண்டோ காரியங்களைத் தான் பலரும் எழுதியிருந்தனர். விடைத்தாள்களைப் பார்த்த ஆசிரியர் மாணவர்களிடம் கூறியது:

“”கிட்டத்தட்ட நீங்கள் எல்லாருமே ஒரே விதமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனா லும் ஒருத்தர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கார். அதை நான் வாசிக்கிறேன்; கேளுங்கள்: அவர் செல்வாவின் விடையை வாசித்தார். “ஒவ்வொரு நாளும் தம்பியுடன் கோவிலுக்குச் சென்றேன். என் தாய்க்குக் கூடமாட உதவி னேன். குடிநீர் பிடித்து வர அம்மாவுடன் சிலதூரம் சென்றேன். பெற்றோருடன் உறவினர் வீடுகளுக்கும் சென்று வந்தேன். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்தேன். பழைய நோட்டுப் புத்தகங்களில் எழுத்துக்களை எழுதிப்படிக்க என் தங்கைக்கு உதவினேன். பக்கத்து வீட்டு அக்காளிடமிருந்து வண்ணக் காகிதங்களால் பூக்களை உருவாக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன்….’

படித்து முடித்தபின் ஆசிரியர் செல்வாவைத் தம் அருகே கூப்பிட்டார். பிறகு செல்வாவைச் சுட்டிக் காட்டி அனைவருக்குமாக அவர் இப்படிக் கூறி னார். “”மாணவர்களே, விடுமுறைக்காலம் என்பது பொழுதுபோக்குகளுக்கான காலம்தான். ஆற்றிலே நீச்சலடிப்பதும் மலையேறச் செல்வதும் தேவைதான். ஆனால் முழுநேரமும் அப்படியே செலவிட்டுவிடக்கூடாது. பெற்றோருக்கு உதவ வேண்டும். புதிய காரியங்கள் படிக்க வேண்டும். புதியவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எனவே, இன்றைய கேள்விக்கு சிறந்த விடை எழுதிய செல்வாவுக்குத்தான் முதல் பரிசு’. எல்லாருக்கும் அது பிடித்துப் போனது. ஆசிரியர் ஒரு பொட்டலம் நிறைய மிட்டாய்களைச் செல்வாவுக்கு வழங்கி அவனைப் பாராட்டினார். செல்வா அந்த மிட்டாய்களை அங்கிருந்த அத்தனை பேருக்கும் கொடுத்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டான்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles